சாலைகளில் பிச்சை எடுத்தார் ரூ.3,383 கோடி சொத்துள்ள பா.ஜ., – எம்.எல்.ஏ.,
மும்பை: மஹாராஷ்டிராவில், மிகப் பணக்கார எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான பா.ஜ.,வைச் சேர்ந்த பராக் ஷா, 57, மும்பையின் காட்கோபர் வீதிகளில் ஒரு நாள் முழுதும் பிச்சை எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, காட்கோபர் கிழக்கு தொகுதியின் பா.ஜ., – எம்.எல்.ஏ., பராக் ஷா, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ரியஸ் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார்.
இவருக்கு, 3,383 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ஜெயின் மதத்தின் புனிதகால வழிபாட்டின் போது, இவரது ஜெயின் ஆன்மிக குருவான ராஷ்டிரசந்த் நம்ரமுனி மஹாராஜின் அறிவுறுத்தலின்படி, தன் ஆடம்பர சொத்துக்கள் மற்றும் வசதிகளை தற்காலிகமாக துறந்து, வீதிகளில் பிச்சைக்காரர் வேடத்தில் ஒரு நாள் முழுதும் வாழ்ந்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


