Lifestyle and human interest
யாசகரான ரூ. 3 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக எம்.எல்.ஏ.! என்ன காரணம் தெரியுமா?

ரூ. 3,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பாஜக எம்.எல்.ஏ. பராக் ஷா யாசகராக சாலையில் வலம் வந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், காட்கோபர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பராக் ஷா, சுமார் ரூ. 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புக் கொண்டவர். இவர் திடீரென சாலையில் யாசகராய் நடந்துச் சென்று யாசகம் பெற்றது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
