தனியார் பல்கலை துவங்குவதற்கான விதிமுறை தளர்வுக்கு வந்தது எதிர்ப்பு
கோவை: தனியார் பல்கலை துவங்குவதற்கான 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, சென்னையில் 12, பிற நகராட்சிகளில் 18, ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கர் இருந்தால் போதும் என மாற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
தனியார் பல்கலைகள் தரமான கல்வி, எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை கொண்டிருக்க, 100 ஏக்கர் நிலம் தேவை என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




