ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்கு உரிமை கோரி வழக்கு.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
நடிகை ஸ்ரீதேவியின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த சொத்து பிரச்னையின் முழுமையான பின்னணி என்ன?
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ஆம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக இந்த சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகளான நடராஜன் மற்றும் சிவகாமி ஆகியோர், அந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ஆனால், முழுமையான விசாரணைக்குப் பிறகே சொத்தின் உரிமை குறித்து முடிவு செய்ய முடியும் எனக் கூறி அந்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து போனி கபூர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
