தாம்பரத்தில் கோலாகலமாக தொடங்கியது தினமலர் -- ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ரிமோட் கார் போட்டியில் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு
தாம்பரம்: 'தினமலர்' நாளிதழ், சத்யா ஏஜன்சிஸ் இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ - 2026' வீட்டு உபயோகப் பொருட்களின் நான்கு நாள் கண்காட்சி, தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
கண்காட்சியை தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், சத்யா ஏஜன்சிஸ் நிர்வாக இயக்குநர் ஜாக்சன் சாமுவேல் ஆகியோர் நேற்று, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சத்யா ஏஜன்சிஸ் பொது மேலாளர் சீத்தாராமன், 'தினமலர்' இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளிரூட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ள இந்த கண்காட்சியில், தமிழகத்தின் பிரபல நிறுவனங்களுடன், வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களின் பொருட்கள், சேவைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்கும் வகையில், கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


