பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா... மாபெரும் தள்ளுபடி விற்பனை! தவறவீடாதீங்க மக்களே... குடும்பத்துடன் வந்து அள்ளிட்டு போங்க தினமலர்- ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் கம்மி விலையில் வாங்கலாம்
தாம்பரம்: தினமலர் நாளிதழ், சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ --- 2026 வீட்டு

தாம்பரம்: 'தினமலர்' நாளிதழ், 'சத்யா' நிறுவனம் இணைந்து வழங்கும்
'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ --- 2026' வீட்டு உபயோக பொருட்கள்
கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்றும், மக்கள் கூட்டம் அலைமோதியது.
தங்களுக்கு பிடித்த ஏராளமான பொருட்களை, குறைந்த விலையில் வாங்கி
குடும்பத்தினர் மகிழ்ந்தனர். இன்று கடைசி நாள் என்பதால், இந்த வாய்ப்பை
தவறவிடாமல், மாபெரும் தள்ளுபடி விலையில் 'ஷாப்பிங்' செய்ய குழந்தைகளுடன்
கிளம்புங்கள் மக்களே.
'தினமலர்' நாளிதழ், 'சத்யா ஏஜன்சிஸ்'
இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ -- 2026' வீட்டு
உபயோகப் பொருட்களின் கண்காட்சி, தாம்பரம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள
ரயில்வே மைதானத்தில், கடந்த 11ல் கோலாகலமாக தொடங்கி, இன்றுடன்
நிறைவடைகிறது.
எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், பர்னீச்சர்ஸ் உள்ளிட்ட பொருட்களை, முதல்
இரண்டு நாட்களில் ஏராளமான மக்கள் வாங்கி குவித்தனர்.
மூன்றாவது நாளான நேற்று, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், ஏராளமான குடும்பத்தினர், குடும்பங்கள் அலை அலையாக வந்தனர்.
கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், குளிரூட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட அரங்குகளில், இதமாக 'பர்சேஸ்' செய்தனர்.
உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபலமான மின் சாதன பொருட்கள்,
வாகனங்கள், பெண்களுக்கான அழகுசாதன பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் மற்றும்
வீட்டிற்கு தேவையான கட்டில், பீரோ உட்பட அனைத்து விதமான பொருட்களை,
மாபெரும் தள்ளுபடி விலையில் அள்ளிச்சென்றனர்.
தவிர, குற்றாலம் போல் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியில் குழந்தைகள் குளித்து மகிழ்ந்தனர்.
சிறப்பு அம்சமாக, 'ஆர்.சி., எனும் ரிமோட் கன்ட்ரோல் கார் ரேஸ்
சாம்பியன்ஷிப்' போட்டி நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு ஒரு
லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் பலர் உற்சாகமாக
பங்கேற்றனர்.
சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட, 'கேம் ஸோனில்'
பேட்டரி கார், வாட்டர் போட், பலுான் ஷூட்டிங், ஒட்டகச் சவாரிகளில் பயணித்து
சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர்.
விளையாட்டுகளையும், பொழுதுபோக்கு இடங்களையும் சுற்றிப்பார்த்த மக்கள்,
'புட் கோர்ட்டில்' பீட்சா, பர்கர், பிங்கர் பிஷ், போண்டா, பஜ்ஜி, வடை,
புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட
சிற்றுண்டிகளும், கம கமக்கும் அறுசுவை உணவுகளையும் ருசித்து மகிழ்ந்தனர்.
கண்காட்சியில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றி பார்த்ததோடு, அவற்றை
அனுபவித்து குதுாகலித்தனர். இதனால், கண்காட்சி அரங்கம், திருவிழா போல்
கூட்டம் அலைமோதியது.
வாகனம், கார் நிறுத்துமிடம், மருத்துவ உதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 'சி.சி.டி.வி' கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
வீட்டுக்கு தேவையான அனைத்துவிதமான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி இன்றே கடைசி. பொருட்களுடன், மருத்துவ
காப்பீடு உட்பட பல சேவைகளையும் பெறலாம் என்ற வாய்ப்பு இருப்பதால், உடனடியாக