வடகிழக்கு பருவமழை பணிகள்: தலைமைச்செயலாளர் நேரில் சென்று ஆய்வு
சென்னை,இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வர
இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றிடும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.







