Weather
வடகிழக்கு பருவமழை பணி: தன்னார்வலர்களுக்கு அழைப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில், மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற, தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட அவசர காலங்கள், பேரிடர் நிவாரண பணிகளில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், பிற அமைப்புகள் தன்னார்வலர்களாக அரசு மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றலாம்.
அதன்படி, 'நம்ம சென்னை' மொபைல் செயலி மற்றும் மாநகராட்சியின் https://www.chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளம் வாயிலாக தன்னார்வலர்களாக பதிவு செய்யலாம்.
பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களின் சேவையை சீராக ஒருங்கிணைத்து, விருப்பத்திற்கு ஏற்ப பங்கேற்பை பயன்படுத்தி கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.