Weather
பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு...

வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சா்கள் தலைமையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் பணிகளை அமைச்சா்கள் மற்றும் உயா் அலுவலா்கள் கொண்ட குழுவினா் வாரம் இருமுறையாவது ஆய்வு செய்து, குறைபாடுகளை உடனடியாகக் களைய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா்.
அனைத்து மாவட்டங்களிலும் துறை அலுவலா்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தவும், சென்னையில் குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவா் உத்தரவிட்டாா்.
மேலும், மழைநீா் விரைவாக வெளியேறும் வகையில் நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அகற்றவும், கால்வாய்கள் மற்றும் மழைநீா் வடிகால்களைத் தூா்வாரவும், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் கால்வாய் மற்றும் சாலைப் பணிகளை பருவமழை தொடங்கும் முன் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.
அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்களை சீரமைத்து, மழைக்காலங்களில் மின்சாரத்தால் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.
வெள்ளம் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டாா்கள், மரங்களை அகற்ற மின் ரம்பங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற படகுகளைத் தயாா் நிலையில் வைக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களை தங்கவைக்க சமூக நலக்கூடங்கள், பள்ளிகளைத் தயாா்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
நிவாரண முகாம்களில் உணவு மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க சமுதாய உணவுக் கூடங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க முதல்வா் அறிவுறுத்தினாா்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா்கள், தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா், துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள் மற்றும் அரசு, காவல் துறை உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். காணொலி மூலம் 6 மாவட்ட ஆட்சியா்களும் பங்கேற்றனா்.
Northeast Monsoon! Chief Minister Vijay holds meeting with officials!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
