குடிநீர் கேட்டு சாலை மறியல்
திருச்செங்கோடு; திருச்செங்கோடு அடுத்த பிரீதி பஞ்., பன்னீர்குத்-திபாளையத்தில், கடந்த, 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சீரான குடிநீர் வழங்கக்கோரி, பஞ்., நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நேற்று மொளசி-திருச்செங்கோடு சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொளசி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும்' என, தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக, திருச்செங்-கோடு-மொளசி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



