Lifestyle and human interest
குடிநீர் வினியோகம் பாதிப்பு பாண்டரவேடு மக்கள் மறியல்
பள்ளிப்பட்டு, செப். 15-– குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாண்டரவேடு மக்கள் நேற்று சாலை

குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாண்டரவேடு மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்டரவேடு காலனியில், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தற்காலிக தீர்வாக, டிராக்டர்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. டிராக்டர்களில் குடிநீர் வினியோகம் செய்வதும், சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், நேற்று பொதட்டூர்பேட்டை – நகரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, உடனடியாக குடிநீர் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்தனர்.
அதை ஏற்ற அப்பகுதி மக்கள், சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, பொதட்டூர்பேட்டை – நகரி மார்க்கத்தில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.