அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை: சொத்து பிரச்சினையில் அண்ணன் வெறிச்செயல்
புதுக்கோட்டை,அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (40) வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது அவரது சொந்த அண்ணன் ரா
அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (40) வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது அவரது சொந்த அண்ணன் ராஜபாண்டி (42) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரமான கொலை சம்பவத்தின் குலைநடுக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் முதல் மனைவியின் மகன் ராஜபாண்டி மற்றும் இரண்டாம் மனைவியின் மகன் ராஜராஜன் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ராஜராஜன் தனது வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு வந்த ராஜபாண்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ராஜபாண்டி பயங்கர ஆயுதங்களுடன் ராஜராஜனை வெட்டப் பாய்ந்தார். உயிருக்கு பயந்து ராஜராஜன் வீதியில் அலறியபடி ஓட, அவரை அரிவாளுடன் ராஜபாண்டி ஆக்ரோஷமாக ஓடவிட்டு விரட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



