Arts, culture, entertainment and media
மாஜி அமைச்சர் மகன் கொலை: 3 பேர் கைது
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மகன் ராஜராஜன், 40, கொலை சம்பவத்தில், மூவரை போலீசார் கைது செய்தனர் .
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தைச் சேர்ந்த, ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மகன்கள் ராஜபாண்டியன், 42, ராஜராஜன்.
சொத்து தகராறில் செப்., 3ல் ராஜபாண்டியன் கத்தியால் குத்தி, ராஜராஜனை கொலை செய்தார்.
ராஜராஜன் மனைவி புகாரில், ராஜபாண்டியன் மற்றும் அவரது அம்மா லெட்சுமி, 65, மனைவி சுவிதா, 38, ராஜபாண்டியன் சகோதரிகள் குடும்பத்தினர் உட்பட, ஏழு பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், ராஜபாண்டியன், சுவிதா, லெட்சுமி ஆகிய மூவரை கைது செய்தனர்.