மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை
மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் முட்புதருக்குள் காயங்களுடன் சடலமாக மீட்கபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
தந்தை வெளியூரில் உள்ளதால் தாயார் யோகலட்சுமி, தமிழ்செல்வன் அவரது சகோதரி ஆகிய மூன்று பேரும் தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாகத் தனது தாயாரிடம் கூறிவிட்டு மாணவன் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



