Politics
தட்டாஞ்சாவடி தேர்தல் புறக்கணிப்பு தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அறிவிப்பு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழ்மீனவர் விடுதலை வேங்கைகள் அறிவித்துள்ளது.
இது அமைப்பின் தலைவர் மங்கையர்செல்வன் கூறியதாவது:
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளை பொறுத்த வரையில் தேர்தல் புறக்கணிப்பு என்பதுதான் நிலைப்பாடு. தேர்தல் அமைப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும். இது ஜனநாயக பூர்வமான தேர்தலாக இருந்ததில்லை. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
புதுச்சேரியில் உள்ள எந்த அரசியல் கட்சியும் மீனவர்களுக்கு பிரதிநிதிதுவம் கொடுப்பதில்லை. தேர்தலிலும் வாய்ப்பு கொடுப்பதில்லை. அரசும் மீனவர்களை புறக்கணிக்கிறது. நீண்ட காலமாக இ.பி.சி. 10 சதவீதம் கோரிக்கை உள்ளது. தற்போது சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெறாத சமுகத்திற்கு நியமன எம்.எல்.ஏ., பதவி வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. மூன்றாவது பெரிய சமுதாயமாக உள்ள மீனவ சமுதாயத்திற்கு நியமன எம்.எல்.ஏ., பதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.