Politics
இந்தியாவின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதில் உறுதி: மத்திய அரசு
- நமது நிருபர்-இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பபதில் உறுதியாக உள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் எரிசக்தி துறையை குறிவைத்து அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறி உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவைவயான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம். அமெரிக்காவின் முடிவால் ஏற்படும் தாக்கங்களை சமாளிப்பது தொடர்பாக இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறையினருடன் கலந்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.