Politics
இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?
அமெரிக்காவின் ரஷ்யா-ஈரான் தடைகள் மசோதாவில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில், 100% வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது|A US sanctions bill could give Trump power to impose tariffs of up to 100% on major buyers of Russian energy, including India.

ரஷ்யாவிடம் எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க ட்ரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க House-ல் முன்னேறியுள்ளது.
அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று முன்பு கூறினார்.
அவரும் அதிபரானதிலிருந்து எத்தனையோ முயற்சிகள் செய்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.
இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிகளை விதித்து ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது அமெரிக்கா.
அப்போதும் ரஷ்யா வழிக்கு வரவில்லை.
ரஷ்யாவிற்கு இன்னும் நெருக்கடியைக் கூட்ட, லிண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026 அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
இந்தச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் வளையத்திற்குள் முக்கியமாக சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் சிக்கும்.
இந்தச் சட்டம் ஈரானுடன் வர்த்தகம் செய்பவர்கள் மீதும் பாயும்.
Waiting..!
நேற்று இந்தச் சட்டம் அமெரிக்காவின் கீழ்சபையில் கொண்டுவரப்பட்டது. அங்கே இது 214–211 என்று ஒப்புதல் பெற்றது. இந்த ஒப்புதலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இருவரும் சாதகமாக வாக்களித்துள்ளனர்.
நாளை இந்தச் சட்டம் இறுதி ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கேயும் ஒப்புதல் பெற்றுவிட்டால், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.
அமலுக்கு வந்தால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
இது நடக்குமா... இதை இந்தியா எப்படி சமாளிக்குமோ?!
