Religion
காவிரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
கரூர்:கரூர் மாவட்டம் நொய்யல், புகழூர் சுற்று வட்டாரத்தில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில், இந்து முன்னணி

மாவட்டம் நொய்யல், புகழூர் சுற்று வட்டாரத்தில், 50-க்கும் மேற்பட்ட
இடங்களில், இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், கடந்த
14ல் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டன.
மாலை, 6:30 மணிக்கு வேலாயுதம்பாளையம் புகழிமலை
பாலசுப்பிரமணியசாமி கோவில் அடிவாரத்தில், இந்து முன்னணி சார்பில்
வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.
இங்கிருந்து கரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக,
தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு 24 விநாயகர் சிலைகள்
கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலை
ஊர்வலத்திற்கு கரூர் ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் தலைமையில், 300க்கும்
மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.