Religion
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு : இளைஞர்களிடையே மோ*தல்!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று (16.09.2026)அதிக அளவில் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, மேட்டூர் காவிரி ஆற்றில் இன்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட ன. இதற்காக மேட்டூர் அருகே உள்ள காவிரிப் பாலம் பகுதியில் லாரிகளில் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது, ஒரு லாரியில் வந்த பெண்கள் மீது மற்றொரு லாரியில் வந்த சில இளைஞர்கள் மலர்களைத் தூவியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மற்றொரு தரப்பினர் தட்டிக் கேட்டதால், வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதையடுத்து, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சாலையில் ஏற்பட்ட தகராறைக் கண்டு அச்சமடைந்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அதோடு இந்த மோதலில் சுமார் ஐந்து இளைஞர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் போலீசார் போக்குவரத்தைச் சீர் செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளைக் கரைக்க வந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)