Religion
மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு..! மேளதாளம் முழங்க சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்..!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பல்வேறு அமைப்பினரால் வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்கப்படுவது வழக்கம். அதன்படி, மூன்றாவது நாளான இன்றும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் மேட்டூர் காவிரி ஆற்றங்கரையோரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பூஜைக்குப் பிறகு, விசைப்படகுகள் மற்றும் பரிசல்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஆற்றின் மையப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நீரில் கரைக்கப்பட்டன. இதேபோல, பூலாம்பட்டி படகு துறை, பரிசல் துறை, சந்தை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வையொட்டி, காவிரி பாலம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலைய திட்டம் தீர்வா? அச்சுறுத்தலா? தூத்துக்குடி அனல் மின்நிலையப் பின்னணி..!
தேவூர், அரசிராமணி, குள்ளம்பட்டி, எடப்பாடி, கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம், கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், சங்ககிரி, ஆட்டையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து கல்வடங்கம் காவிரி ஆற்றில் பக்தர்கள் கரைத்துச் செல்கின்றனர்.
