Politics
தமிழகத்தில் மதர்சன் நிறுவனம் ரூ 11,000 கோடி முதலீடு செய்கிறது

சென்னை: 'மதர்சன்' நிறுவனம் ஐரோப்பிய கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய், ல ண்டன் சென்றுள்ளார். அங்கு, 'சம்வர்த்தனா மதர்சன்' நிறுவ னம், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, தளவாட வசதி ஆகிய துறைக ளில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மதர்சன் நிறுவனம், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த தனது கூட்டு நிறுவன பங்குதாரர்களுடன் இணைந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகளவில் செயல்படும் மதர்சன் நிறுவனத்தின் இந்த முதலீட்டு திட்டம், சர்வதேச அளவில் வலுவான ஒத்துழைப்பை கொண்டுள்ளது.
அதன் உலகளாவிய கூட்டு நிறுவனங்களின் வலையமைப்பு, தொழில்நுட்ப திறன்கள், சர்வதேச கூட்டாண்மைகளை ஒன்றிணைத்து, தமிழகத்தின் மேம்பட்ட உற்பத்தி துறையின் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த முதலீடு உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.