Politics
CM Vijay: தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு - முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்
லண்டனில் முதல்வர் விஜய், தமிழகத்திற்கு ரூ.11,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து ஒப்பந்தம் கையெழுத்து! | Tamil Nadu CM Vijay flags off Ajith Kumar's race in London and secures major investment MoUs including Samvardhana Motherson and Wilson Power Solutions.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு செய்ய, இன்று ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
முதல்வர் விஜய், தன்னுடைய முதல் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருக்கிறார்.
லண்டன் சென்றவர், கடந்த சனிக்கிழமை, லண்டனில் நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு, இன்று தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு செய்ய, இன்று ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக முதல்வர் விஜய்யின் அலுவலகம், "இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் திரு. ஹரிகிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் திரு. டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோரும் கையெழுத்திட்டு, ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
