Arts, culture, entertainment and media
மது பாட்டிலுக்கு கூடுதல் விலை டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்
கோவை: டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க, நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் கூடுதல் விலை வைத்து விற்றதாக 48 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த புகார்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அனுஷியா தேவி, ‘‘மது பாட்டில்கள் கூடுதல் விலையில் வைப்பதாக வந்த புகாரை அடுத்து கடந்த 2ம் தேதி 20 பேர், 3ம் தேதி 28 பேர் என, 48 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்படியே நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.