Arts, culture, entertainment and media
கூடுதல் விலை கிடையாது எனக் கூவி கூவி விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள்..!

தமிழகத்தின் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்த ஊழியர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், கூடுதல் விலை கிடையாது, MRP விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என ஊழியர்கள் கூவி கூவி விற்பனையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.