Politics
லண்டனில் இருந்து சென்னை வந்தடைந்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கடந்த 10ஆம் தேதி (10.09.2026) லண்டனுக்குச் சென்ற நிலையில், 6 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று (17-09-26) காலை சென்னை வந்தடைந்தார்.
இந்த பயணத்தின் போது, முன்னணி நடிகரும் மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் அஜித் குமாருடன் முதல்வர் விஜய் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, முதல்வர் விஜய் தலைமையில் பல்வேறு புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக சுமார் ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், இதன் மூலமாக 10,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகவாவும் உருவாக்கக்கூடிய வகையில் முதலீடுகள் அமைந்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலூம், தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்தக்கூடிய நோக்கி இந்த பயணம் வெற்றி பயணமாக அமைந்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், லண்டனில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்தடைந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)