Religion
Madurai | விழாக்கோலம் பூண்ட மதுரை.. மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்.!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. 8 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, பக்தர்கள் மீது தெளிக்கப்பட்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2009ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடந்த நிலையில், அடுத்ததாக 2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த குடமுழுக்கு விழா தீ விபத்து காரணமாக தள்ளிபோனது. தற்போது விரிவான திருப்பணிகள் நிறைவடைந்துள்ள சூழலில், இன்று காலை 7.40 மணியளவில் திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
8 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 2000 புனித நீர் கலசத்திற்கு ஊறப்பட்டது. 12 கோபுரங்களில் உள்ள கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. பிறகு 12 கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு தீபாராதணை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து மீனாட்சி சொக்கநாதர் தங்க விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 10 மணி வரை பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தால் பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
