Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம் ஆர்வத்துடன் 6,200 மாணவ- – மாணவியர் பங்கேற்பு
காஞ்சிபுரம், செப். 10– காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில், 2026ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை
காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில், 2026ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இந்நிகழ்ச்சியை, ஸ்ரீபெரும்புதுார் த.வெ.க., – எம்.எல்.ஏ.வும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான தென்னரசு, போட்டிகளை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தலைமை வகித்தார்.
தொடர்ந்து, கேரம் மற்றும் கைப்பந்து போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கலெக்டர் சினேகாவுடன் கேரம் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
வரும் 27ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பூப்பந்து, கேரம், கால்பந்து, கைப்பந்து, வாலிபால், கபடி, மட்டைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, சிலம்பம், யோகாசனம், நீச்சல், தடகளம், செஸ், ஸ்பீடு ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரி மாணவ -– மாணவியர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா நிகர்நிலை பல்கலை விளையாட்டு மைதானம் மற்றும் வையாவூர் சாலையில் உள்ள ஸ்பீடு ஸ்கேட்டிங் மையம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டிகளை நடத்துவதற்காக 100 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தொடக்க நாளான நேற்று பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த சுமார் 6,200 மாணவ – , மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எழில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

