Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு: பதிவு அவசியம்
ஈரோடு:முதல்வர் கோப்பைக்கான ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வரும், 9ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடக்கிறது.
கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது: இப்போட்டிகளில் மாவட்டத்தில், 12 வயது முதல் 19
வயது வரையிலான பள்ளி மாணவர், 17 வயது முதல் 25 வயது வரையிலான
கல்லுாரி மாணவர், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினர், அனைத்து
வயது மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு ஊழியர்களுக்கு போட்டி
நடத்தப்படுகிறது. அனைத்து போட்டிகளும் காலை, 7:00 மணிக்கு
துவங்கும். இணையத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள
முடியும். நேரடி பதிவு முறை கிடையாது. மேலும் விபரங்களுக்கு ஈரோடு
மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.