Politics
ஆன்லைனில் வாகன பதிவு சந்தேகம் தீர்க்க உதவி மையம்
கோவை: ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு ஆகியவை ‘ஆன்லைன்’ முறைக்கு மாறியதால், அது குறித்த மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க கோவை மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு, சூலுார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
‘பரிவாஹன்’ இணையதளத்தின் செயல்பாடு பயன்பாடு குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். இதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கூறினார்.