Politics
தமிழகத்தில் அமலானது டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம்!

சென்னை: தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி., எனப்படும் வாகனப் பதிவுச்சான்றை, 'டிஜிட்டல்' வடிவில் வழங்கும் முறை அமலானது.
இது குறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்கள் இனி ஓட்டுனர் உரிமம் பெற, 'ஆன்லைனில்' விண்ணப்பித்ததும், அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்வர். பின்னர், ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், ஒப்புதல் அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர் அளித்த மொபைல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி., வந்தபின், டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை, பரிவாஹான் இணையதளம் வழியாக அல்லது எம்.பரிவாஹான் செயலி வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இனி ஓட்டுனர் உரிமம் தபால் வாயிலாக அனுப்பப்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.