Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
திருவள்ளூர்: திருவள்ளூரில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை, திருவள்ளூர் கலெக்டர் கவிதா நேற்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. திருவள்ளூர் கலெக்டர் கவிதா போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, நான்கு பிரிவுகளில், 45 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய போட்டிகளில் தடகளம், வாலிபால், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில், 10,437 வீரர் – வீராங்களையர் பங்கேற்றனர்.
மேலும், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.


