Lifestyle and human interest
பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாள் ஸ்பெஷல்; தலைவர்கள் வாழ்த்து முதல் 25 அடி நீளமுள்ள மணல் சிற்பம் வரை!

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு இன்று (செப் 17) 76 வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவையை போற்றும் வகையில், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய 25 அடி நீளமுள்ள மணல் சிற்பம் வரவேற்பை பெற்றது.
நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 17) பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் போற்றும் வகையில், இன்று (செப்டம்பர் 17) முதல் அக்டோபர் 17 வரை நாடு முழுவதும் மாதாந்திர சேவை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் வேண்டி இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மண் விளக்குகள் ஏற்றி வழிபட பாஜ தரப்பில் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கித் தாய்நாட்டை வழிநடத்திச் செல்லும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ந்து வலிமை கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ், இந்தியா இன்று உலக அரங்கில் நம்பிக்கையுடன் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி வருகிறது. வளர்ச்சி, தன்னிறைவு, புத்தாக்கம், டிஜிட்டல் முன்னேற்றம், உள்கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் நாடு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை, 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி அயராது உழைக்க லட்சக்கணக்கான குடிமக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. உங்களுக்குச் சிறந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நாட்டிற்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கான வலிமையை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பிரதமர் மோடிக்கு வெற்றி, நல்வாழ்வு மற்றும் மக்கள் சேவையில் இன்னும் பல ஆண்டுகள் அமைய வாழ்த்துவதில் தேசத்துடனும், உலகத்துடனும் நானும் இணைகிறேன். உங்கள் சாதனைகள் மூலம் நீங்கள் தொடர்ந்து உலகளவில் ஊக்கமளித்து வருகிறீர்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின்: பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
சிறப்பு வீடியோ!



