Lifestyle and human interest
பிரதமர் மோடிக்கு நீடித்த ஆயுள் மோடிக்கு கிடைக்க நாளை விளக்கேற்றுங்கள்; மக்களுக்கு பாஜ வேண்டுகோள்

புதுடில்லி; பிரதமர் மோடியின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக வரும் செப்டம்பர் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் 'ஆசீர்வாத தீபம்' ஏற்றுமாறு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டியும், அவர் பொது வாழ்வில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் குறிக்கும் வகையிலும், நாடு முழுவதும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு பொதுநல சேவைகளை செய்யும் இயக்கத்தை துவங்க பாஜ திட்டமிட்டு உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 17ல் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றுமாறு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிதின் நபின் கூறியதாவது: மக்களுக்கு சேவையாற்றுவதே நாட்டிற்கு சேவையாற்றுவது' என்பதே பிரதமர் மோடியின் வாழ்வின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது.
பொதுச் சேவை மற்றும் தேசக் கட்டமைப்பிற்கான உறுதியுடன் அர்ப்பணிக்கப்பட்ட அவரது 25 ஆண்டுகால அரசியல் பயணம் உண்மையிலேயே இணையற்றது.அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவமானது நாட்டிற்குப் புதிய வாய்ப்புகளையும், வலிமையையும் அளித்துள்ளது. இன்று, அவரது அர்ப்பணிப்பால், 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.
நாட்டின் இந்த முன்னேற்றப் பயணத்திற்கும், மோடியின் சிறப்பான தலைமைத்துவத்திற்கும் நமது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 17ம் தேதி பிரதமரின் பிறந்தநாளையொட்டி, மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீடுகளில் 'ஆசீர்வாதக் தீபம்' ஒன்றை ஏற்றி வைப்போம்; அத்துடன் அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்வாழ்விற்கும் வேண்டி நமது ஆசீர்வாதங்களை வழங்குவோம். இவ்வாறு நிதின் நபின் கூறியுள்ளார்.



