Lifestyle and human interest
ஆHAAN! அவார்ட்ஸ்!

‘மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17, மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மக்கள் தங்கள் வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்றி, பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்ததற்கு.
தமிழக அமைச்சர் குறித்து மீண்டும் சர்ச்சையாகப் பேசி ஆ.ராசா சர்ச்சைக்கு ஆளானதற்கு.
ரசிகர் சண்டைகளைத் தாண்டி, கடல் கடந்த நட்பில் `நண்பேண்டா’ என்று முதல்வர் விஜய் & நடிகர் அஜித் ஆரத்தழுவிக் கொண்டதற்கு.
``தெருவில் விளையாடிக் கொண்டிருக்கின்ற குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை த.வெ.க இழுத்துக் கொண்டதால்தான் இடைத்தேர்தல் வந்திருக்கிறது’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு.
