Politics
நான் அழைத்து தான் விஜய் வந்தார்! - அஜித் முதல்வரின் லண்டன் பயணம்! முதலீடுகளை ஈர்க்கவா?

தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். இந்த லண்டன் பயணத்தை திட்டமிட்ட திலிருந்தே சர்ச்சைகளும், சந்தேகங்களும் வலுக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த ஆகஸ்ட்டில்தான் த.வெ.க. அரசின் முதல் தொழில் முதலீட்டு மாநாடு சென்னையில் நடந்தப்பட்டு 1 லட்சம் கோடிக்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக் கப்பட்டன. அதன் ஈரம் காய்வதற்குள் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பறந்துள்ளார் விஜய்.
வெளிப்படைத்தன்மையில்லாத விஜய்யின் பயணம்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற் காக வெளிநாடுகளுக்கு முதல்வர்கள் செல்வது இயல்பானதுதான். அப்படி அரசுமுறைப் பயணமாக அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது, வெளிநாட்டில் அவரது புரோக்ராம் என்னவென்பதையும், அவருடன் யார், யார் பயணிக்கிறார்கள் என்பதையும் முன்கூட்டியே வெளிப்படையாக அரசு தெரிவிக்கும்.
முதல்வராக கலைஞர் ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றபோது அவருடன் நிதித்துறைச் செயலாளர் வெங்கட்ராமன், தொழில்துறை அதிகாரிகள் சென்றனர். ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது அவரது வெளிநாட்டுப் பயணத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர், தொழில்துறை அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் சென்றனர். அதேபோல, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றபோது, அவருடன் தொழில்துறை அமைச்சர் சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டவர்கள் புறக் கணிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணி- விளையாட்டு துறைகளின் அமைச்சர் ஆதவ்அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் சென்றுள்ளதாக தெரிவிக்கிறது அரசு. ஆனால், விஜய்யின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி,
விஜய்யின் பாதுகாப்பு அதிகாரி தர்மராஜன், விஜய்யின் பிசினெஸ் பார்ட்னர் ராம்குமார், விஜய்யின் கார் டிரைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் லண்டன் சென்றுள்ளனர். அவர்களின் பெயர்களை அரசு தெரிவிக்க வில்லை. விஜய்யின் லண்டன் பயணம் குறித்து முழுமையான விபரங்களை வெளியிட வில்லை.
லண்டன் செல்கிறாரா கீர்த்தனா?
கசகஸ்தான் நாட்டின் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்து, 11-ஆம் தேதி இரவுகூட புறப்பட்டு லண்டனுக்கு அமைச்சர் கீர்த்தனா சென்றிருக்க முடியும். ஆனால், அப்படி சென்றதாகத் தெரியவில்லை. தொழில்துறை அமைச்சரும், அதிகாரிகளும் இல்லாமல் அப்படி என்ன தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் நிறுவனங்களுடன் விஜய் ஆலோசிக்கப்போகிறார்? அது அவருக்குத்தான் வெளிச்சம். இதற்கிடையே, தொழில்துறை அமைச்சரில்லாமல் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒரு பயணமா? என்கிற சர்ச்சை விஜய்யை நோக்கி வெடித்திருப்பதால், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தனாவை லண்டனுக்கு அழைக்கலாமா? என்று லண்டனில் ஆலோசித் திருக்கிறார் விஜய்.
வெளிநாட்டு முதலீடா?
வெளிநாட்டில் முதலீடா?
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை, "வெளி நாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? வாட் ப்ரோ,…இட்ஸ் வெரி ராங் ப்ரோ' என்று நக்கலடித் துப் பேசினார் விஜய். இப்போது அதே நக்கலும் சந்தேகமும் விஜய்யின் பயணம் மீது திரும்பியிருக் கிறது. காரணம், அவரது வெளிநாட்டு பயணத் திட்டம் பற்றி முழுமையாக மக்களுக்குத் தெரிவிக்க வில்லை. அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத் தில் செயல்பட்டு வரும் பிரிட்டன் நிறுவனங்களுட னான உறவை வலுப்படுத்துவது, மின்சார வாகனங்கள், மின்னணுவியல், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்யூட் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வை யிட்டு, அதன் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வது என்கிற ரீதியில் சில அறிவிப்புகளை செய்திருக்கிறது. இதில், லண்டனில் ஒவ்வொரு நாளும் விஜய்யின் புரோக்ராம் என்ன? என்பது பற்றி தெளிவுபடுத்தவில்லை. இதனால், விஜய்யின் அரசுமுறைப் பயணம், பலத்த சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது.
விஷ்ணுரெட்டியும் விஜய்யின் கோபமும்!
லண்டன் செல்ல கடந்த 10-ஆம் தேதி இரவு விஷ்ணுரெட்டி சகிதம் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தார் விஜய். ஏர்போர்ட்டில் ஜனாதிபதி, பிரதமர் செல்வதற்காக பிரத்யேக வாயில் உண்டு. ஒரு மாநில முதல்வர் முறைப்படி அனுமதி பெற்றால் அந்த வாயிலை பயன்படுத்தமுடியும். அதன்படி பிரத்யேக வாயில் வழியாக ஏர்போர்ட் ரன்வேக்கு செல்ல விஜய்யின் கார் வந்தபோது, அவரை உள்ளே அனுமதித்தனர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர். அதேசமயம், பிரத்யேக வழியில் விஜய் யுடன், விஷ்ணுரெட்டி செல்லவும் அனுமதிக்க வில்லை. அப்போது, "அவர் எனது அட்வைஸர்; என்னுடன் பயணிக்கிறார்' என சொல்ல, "ஸாரி சார்…உங்களின் அட்வைசர் என்பதற்காக அனுமதிக்க முடியாது. சாதாரணப் பயணியாக செக்யூரிட்டி செக்கப், இமிக்ரேஷன் க்ளியரன்ஸ்களை இவர் முடித்துக்கொண்டு வரட்டும். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?' என்று ஆர்க்யூ பண்ணியதும், டென்சனான விஜய், "நானும் பயணிகள் செல்லும் வழியிலேயே போகிறேன்'' என சொல்ல, "அது உங்கள் விருப்பம்'' என்று கூலாக சொல்லி விட்டனர். இதனையடுத்து, பயணிகள் செல்லும் வாயில் வழியாக விஜய்யும் விஷ்ணுரெட்டியும் சென்றனர். ஆனால், அதற்குள் பயணிகள் செல்லும் வழியில் சாதாரண பயணியாக சென்றார் விஜய் என ரூட் மாஃபியாக்கள் சோசியல் மீடியாக்களில் அலப்பறை செய்தனர்.
மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள்!
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்பது மிக சொகுசான ப்ளைட்! இந்த ப்ளைட்டில் எக்கனா மிக் க்ளாஸ் என்கிற சாதாரண கட்டணத்தில் விஜய் பயணிக்கவில்லை. மாறாக, பல்வேறு நவீன வசதிகள் கொண்ட மிக ஆடம்பரமான பிரைவேட் சூட் மாதிரி இருக்கும் பிசினெஸ் கிளாஸில் பயணித்தார். இதன் கட்டணம் மிகமிக அதிகம். பயணிகள் வாயிலைப் பயன்படுத்தியவர், சாதாரணப் பயணிகள் செல்லும் சாதாரண கட்டணத்தில் பயணித்திருக்கலாமே! மக்கள் பணத்தில் ஒருபைசா கூட தொடமாட்டேன்; தொடவிடமாட்டேன்; தொட்டவர்களையும் விட மாட்டேன் என்றெல்லாம் அடிக்கடி டயலாக் பேசும் விஜய், இதற்கு முன்னுதாரணமாக சாதா ரண கட்டணத்தில் பயணிக்க வேண்டியதுதானே? இதுபோக, லண்டன் பிரிட்ஜ் ஏரியாவில் புகழ் பெற்ற ஷேர்ட் கட்டிடத்தினுள்ளே இருக்கும் ஷங்கரி லா 5 ஸ்டார் ஹோட்டலில் விஜய் தங்கியிருக்கிறார். ஆனால், ஹோட்டல் பெயரைக்கூட வெளிப்படையாகச் சொல்லாமல், லண்டன் ப்ரிட்ஜ் ஏரியாவில் தங்குகிறார் என போகிறபோக்கில் சொல்லியிருக்கிறது அரசு. ஆனால், மிக மிக ஹாஸ்ட்லியான இந்த 5 ஸ்டார் ஹோட்டலின் ஒருநாள் சூட் ரூம் கட்டணம் இந்திய பணத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் என்கிறார்கள். இது வெறும் ரூம் கட்டணம் மட்டும்தான். தவிர சாப்பாடு மற்றும் டேக்ஸ் தனி. இதே ஹோட்டலில்தான் ஆதவ் அர்ஜுனா, விஷ்ணு ரெட்டி, திரிஷா உள்பட விஜய்க்காக வந்திருந்த 24 பேரும் தங்கியதாக சொல்லப்படு கிறது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள். இதற்கிடையே, நடிகை கீர்த்தி சுரேஷும் லண்டன் சென்றார் என பரப்பப்பட்டது. அவர் லண்டன் செல்லவில்லை. ஷூட்டிங்கிற்காக கனடா சென்றுள்ளார்.
விஜய்யின் கார் டிரைவருக்கு லண்டனில் என்ன வேலை?
சென்னையிலிருந்து விஜய் பயணித்த அதே எமிரேட்ஸ் விமானத்தில் அவரது டிரைவரும், விஜய்க்கு சாப்பாடு எடுத்து வைப்பது, துணிகளை மடித்து வைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருபவருமான ராஜேந்திரனும் அழைத்துச் செல் லப்பட்டார். சாதாரண கட்டணத்தில் பயணித்தார் ராஜேந்திரன். இவரது மகன்தான் சட்டமன்ற கொறடா சபரிநாதன். விஜய்யின் கார் டிரைவருக்கு லண்டனில் என்ன வேலை? இவருக்கான செலவு களை யார் ஏற்பது? அரசு பணத்தில் கணக்குக் காட்டப்படுமா? என்றெல்லாம் தொழில்துறையில் விமர்சனங்கள் எதிரொலிக்கின்றன. தமிழகத்திலும் வட இந்தியாவிலும் உருவாக்கியதுபோல, லண்ட னில் விஜய் செல்லும் ஒவ்வொரு முக்கிய இடத்தி லும் அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் மெய்மறந்து கத்திக் கூப்பாடு போட வேண்டும் என்கிற செட்- அப்பை முன்கூட்டியே செய்து வைத்திருந்தது ரூட் மாஃபியா. அதே மாதிரிதான் நடந்தது.
சென்னையில் மோட்டார் ரேஸிங் சர்க்கியூட் உருவாக்க முடியுமா?
"உலகத்தரம் வாய்ந்த மோட்டர் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்' என சட்டமன்றத்தில் அறிவித்தார் விஜய். அதனடிப்படையில், லண்டனிலுள்ள சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்கியூட்டை விஜய் பார்வையிட்டு அதன் உள்கட்டமைப்புகளை ஆராய்வது பயணத்தின் நோக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சர்வதேச மோட்டார் ரேஸிங் சர்க்கியூட் என்பது எஃப் (எ1, எ2, எ3…) சீரிஸ் கொண்டதாக இருக்கவேண்டும். எஃப் சீரிஸ் சர்க்கியூட் என்பது 5.5 கிலோமீட்டர் நீள்வட்டப் பாதையைக் கொண்டது. இந்த சர்க்கியூட்டை அமைக்க ஒரு கிராமமே தேவைப்படும். அவ்வளவு எளிதாகவும் இதனை அமைத்துவிட முடியாது. அதேசமயம், எஃப் சீரிஸ் வகை போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கே பல 100 கோடிகளை செலவிட வேண்டியதிருக்கும். அந்த வகையில், தற்போது நடிகர் அஜித் கலந்துகொண்ட சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்கியூட்டில் நடந்த கார் ரேஸிங் போட்டி ஒரு க்ளப் அளவில் நடந்த கார் ரேஸிங்தான். எஃப் சீரிஸ் போட்டி கிடையாது. க்ளப் அளவிலான சர்க்கியூட்டைத்தான் பார்வையிட்டுள்ளார் முதல்வர் விஜய்.
விஜய் -அஜீத் -திரிஷா!
சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்கியூட் வளாகத்தில் நடிகர் அஜித்தை கண்டதும் ஓடோடி வந்து கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய். இருவரும் சினிமாவில் பகையாளிகளாக காட்டிக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவந்த நிலையில்... விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனிவரும் தேர்தல்களில் அஜித் ரசிகர்களின் ஆதரவு தமக்கு வேண்டும் என்கிற அரசியல் கணக்கில் இந்த சந்திப்பை நடத்தியிருக்கிறார் விஜய். இப்படி ஒரு சந்திப்பு நடக்க வேண்டும் என்பதில் த்ரிஷாவின் பங்களிப்பும் இதில் இருந்துள்ளது. ஏற்கனவே, விஜய் -திரிஷா குறித்த சர்ச்சைகள் பொதுவெளியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி வைத்துள்ள நிலையில், லண்டனில் இருவரும் இணைந்து அஜித்தின் கார் ரேஸிங்கை ரசித்ததும், திரிஷாவுக்கு விஷ்ணு ரெட்டியும் ஆதவ் அர்ஜுனாவும் கொடுத்த முக்கியத்துவமும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். மக்களால் முதலமைச்சரான விஜய், அந்த மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்ன மெசேஜ் சொல்கிறார் என்பதில் இருக்கிறது அவரது கண்ணியம். அதனால் மக்களிடமிருந்து பொதுவெளியில் கேள்விகள் வரத்தான் செய்யும்.
விஜய்யின் லண்டன் பயணத்தின் நோக்கம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க எனச் சொல்லப்பட்டாலும் தனிப்பட்ட காரணங்களுக் காக அவர் சென்றுள்ளார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல் பரவியுள்ளது. குறிப்பாக, விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என நீதிமன்றம் சென்ற அவரது மனைவி சங்கீதா, ஒரு கட்டத்தில் அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த சூழலில், இத்தகைய பெர்சனல் பிரச்சனைகள் தொடர்பாக, சங்கீதாவின் குடும்ப உறவுகளை சந்தித்துப் பேசவும், தீர்வு காணவும் விரும்புகிறார் விஜய். மேலும், உடல் ரீதியிலான சில மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. இதற்காகத்தான் லண்டன் வந்துள்ளார் என்றும் தகவல் கிடைக்கின்றன. இது தவிர, விஜய்யின் தொழிலதிபர்கள் நண்பர்களான ரெட்டி சகோதரர்களுக்கு லண்டனில் பல முதலீடுகள் இருக்கின்றன. அவர்கள் மூலமாக சில முதலீடுகள் செய்வது தொடர்பான ஆலோ சனைகளுக்காகவும் இந்த லண்டன் பயணம் என்றும் உளவு வட்டாரங்கள் சொல் கின்றன. "நான் அழைத்து தான் விஜய் லண்டன் வந்தார்' என அஜித் தெரி வித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் வாட்ச்சிங்கும் தமிழகம் வெயிட்டிங்கும்!
லண்டனில் விஜய் இருக்கும் ஒவ்வொரு நாளும் விஜய்யின் மூவ் களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டிலுள்ள வெளிநாட்டு உளவு அமைப்பான ரா மற்றும் ஐ.பி. ஆகியவை கண்காணித்து வருகின்றன. இந்திய ஹை-கமிஷ னும் அதன் ரூட்டில் டெல்லி யின் உத்தரவின்படி வாட்ச் பண்ணுகிறது. மேலும், மத்திய நிதித்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்திய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் போர்வையில் விஜய்க்கு நெருக்க மானவர்களை சந்தித்துவருகிறார்கள் என்கிற தகவல்களும் கிடைக்கின்றன. லண்டன் பயணத்தை முடித்து விட்டு, 17-ஆம் தேதி சென்னை திரும்பு கிறார் விஜய். அப்போது, என்ன முதலீடுகளை லண்டனிலிருந்து தமிழகத்திற்கு ஈர்த்திருக்கிறார் என்பது அம்பலமாகும். அதற்காகத்தான் தமிழகம் வெயிட்டிங்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)