Politics
முதல்வர் பதிலுரைக்குப் பின் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு: திமுகவினர் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தது குறித்து...
சட்டப்பேரவையில் திமுகவினர் வெளிநடப்பு - TN Assembly
சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான பதிலுரையை முதல்வர் இன்று வழங்கினார். மேலும், பதிலுரையின்போது திமுகவின் ஊழல்கள் குறித்தும் முதல்வர் விஜய் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வரின் பதிலுரைக்குப் பின் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரின் இருக்கையை திமுகவினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, அமளியில் ஈடுபட்டதையடுத்து, திமுகவினரை பேச அனுமதிக்குமாறு முதல்வர் விஜய் கூறினார்.
இருப்பினும், அவை தொடங்கியதிலிருந்தே திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.
இதனையடுத்து, பேரவையில் திமுகவினர் தர்னாவில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பேரவையைவிட்டு திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
DMK MLAs staged a walkout from the Legislative Assembly after being denied permission to speak
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.