Politics
“திமுக ஆட்சியில் கமிஷன்”.. அமலாக்கத்துறை கடிதமே ஆதாரம்! முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஒப்பந்தங்களுக்கு 7.5 முதல் 10 சதவீத கமிசன் லஞ்சம் - முதலமைச்சர் விஜய்
தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை ஆதாரமாக வெளியிட்டு முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையில் PARTY FUND என்ற பெயரில் வாங்கிய லஞ்சத்தில் நேரடியாக பலன் பெற்றவர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்.
அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பரபரப்பு புகார்.
திமுக ஆட்சியில் டாஸ்மாக் பார் ஊழலில் பவர் புரோக்கராக செயல்பட்டவர் ரத்தீஷ்.
தவெக ஆட்சிக்கு வந்ததும் துபாயில் ஒளிந்து கொண்டதாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.
திமுக ஆட்சியில் அதிகாரிகளை கன்ட்ரோலில் வைத்திருந்த ரத்தீஷ் என்பவர் யார்?
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களை நோக்கி முதலமைச்சர் விஜய் கேள்வி.
ரத்தீஷ் உத்தரவின்படியே ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் - முதலமைச்சர் விஜய்
திமுக ஆட்சியில் கரூர் கேங் என்ற பெயரில் பார் உரிமையாளர்களிடம் PARTY FUND வசூல். கரூர் கேங்கின் தலைவன் யார் என தெரிந்து கொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் விஜய் கிண்டல்.
கரூர் கேங் ORGANISED CRIME SYNDICATE ஆக செயல்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்
திமுக ஆட்சியில் ORGANISED CRIME SYNDICATE ஆக கரூர் கேங் செயல்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை ஆதாரத்தை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் விஜய் விளக்கம்.
பார் உரிமையாளர்களிடம் PARTY FUND வசூலிக்க அமைச்சராக செந்தில்பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
அமலாக்கத்துறை கொடுத்துள்ள ஆதாரங்களை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.
திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ஊழல்.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியை, ரத்தீஷ் என்பவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.
டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிலருக்கு ஜாமீன் தான் கிடைத்துள்ளது, வழக்கை விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை.
தற்போது 2 துறைகளின் ஃபைல்களை தான் ஓப்பன் செய்துள்ளோம், மற்றவைகளை எல்லாம் ஓபன் செய்தால் என்ன ஆகுமோ என முதலமைச்சர் விஜய் ட்விஸ்ட்.
50 வருடங்களுக்கு முன்னர் வீராணம் திட்டத்திற்காக ஒப்பந்ததாரர்களிடம் இரண்டரை சதவீதம் கமிசன் கேட்டவர் கருணாநிதியின் மருமகன் மாறன்.
சர்க்காரியா கமிசன் அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பேச்சு.
தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டரை கொடுக்க முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதுடன் அதிகாரிகளுக்கு நெருக்கடியும் கொடுத்தவர் கருணாநிதி.
வீராணம் ஒப்பந்தத்திற்காக 1974ம் ஆண்டு வரை 7 முறை தவணை முறையில் ரூபாய் 29 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சர்க்காரியா கமிசன் கூறியதை சுட்டிக்காட்டி விஜய் சாடல்.
ஊழல் என்று சொன்னால் ஆதாரம் இருக்கிறதா என்று தான் திமுகவினர் கேட்பார்கள்.
ஊழல் செய்யவே இல்லை என சொல்லமாட்டார்கள் என முதலமைச்சர் விஜய் கிண்டல்.
தமிழ்நாட்டில் பெண்களை தனிப்பட்ட முறையில் இழிவு செய்யும் ஆபாச நதி மற்றும் வன்ம நதி சமீப காலத்தில் அதிகம் ஓடிக் கொண்டிருக்கிறது.
பெண்களை அசிங்கமாக பேசுபவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யும் என முதலமைச்சர் விஜய் உறுதி.
சட்டப்பேரவையில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கீடு செய்வது பொறுப்புடமை ஆகாது.
வியாழன்று எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு பதில் சொல்லாதது ஏன்? என்கிற உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்.
மக்களுக்காக சட்டப்பேரவையில் பேச வேண்டியதை இதயத்தில் இருந்து தயார் செய்து பேசுகிறேன்.
3 நாட்கள் அவகாசத்தில் தயார் செய்து கொண்டு வந்து பேசட்டும் என கூறிய உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் பதிலடி.
தவறு செய்தால் மாட்டிக் கொள்ளாத வகையில் ஏற்பாடு செய்துவிட்டு தான் திமுகவினர் தப்பே செய்வார்கள்.
திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும், தப்பு நடக்கும் இடத்தில் திமுக இருக்கும் என முதலமைச்சர் விஜய் சாடல்.
அரசியல் வரலாற்றில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஆந்திராவின் என்டிஆருக்கு பிறகு தாம் தான்.
மக்கள் ஆதரவால் முதலமைச்சரான தலைவர்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பெருமிதம்.
சட்டம் ஒழுங்கை பற்றி பேசுவதற்கு முன்பு திமுகவினர் கண்ணாடியை பார்க்க வேண்டும்.
ஆற்று மணல், இயற்கை வளங்களை சுரண்டி சீரழித்தது திமுக... திமுக...திமுக... என முதலமைச்சர் விஜய் ஆவேசம்.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் கடந்த 100 நாட்களில் தோன்றியவை அல்ல.
தி.மு.க. செய்த தவறுகளை திருத்துவதற்கு அவகாசம் தேவை என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேச்சு.
த.வெ.க. ஆட்சியில் காவல்துறையில் ஆளும் கட்சியினரின் எந்த தலையீடும் இருக்காது.
போதைப்பொருள் புழக்கம் எனும் மரத்தை 100 நாட்களில் வெட்டிவிட முடியாது எனவும் விஜய் பேச்சு.