Politics
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திங்கட்கிழமை; உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் பதில்!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவெக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், தான் வைத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
அதற்கு முதல்வர் விஜய், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திங்கட்கிழமை (07-09-26) பதிலளிப்பதாகவும், பதிலளிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஓடிவிட கூடாது என்றும் திமுகவை கிண்டலடித்தார். உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளிக்கும் நாளுக்காக கடந்த 3 நாட்களாக மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. இந்த கூட்டத்தில் வணிகவரி - பத்திரப்பதிவு - சுற்றுச்சூழல் - வனத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளிக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)