Arts, culture, entertainment and media
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் பூட்டு – சங்கிலியுடன் வந்தவர்களால் சலசலப்பு
வண்ணாரப்பேட்டை, செப். 7– பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றவர்களால், சல சலப்பு நிலவியது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை – மின்ட் சஞ்சீவிராயன் தெருவில், எண். 63 – டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, பள்ளிக் கல்லுாரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருக்கும் நிலையில், குடிமகன்களால் தொந்தரவு ஏற்பட்டு வந்தது.
எனவே, அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், நடவடிக்கை இல்லை. நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்கள் பூட்டு, சங்கிலியோடு வந்தனர்.
தகவல் அறிந்த போலீசார், பூட்டு மற்றும் சங்கிலியுடன் வந்தவர்களை, தடுத்து நிறுத்தி பேச்சு நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறான டாஸ்மாக் கடையை கண்டிப்பாக மூட வேண்டும் என, வலியுறுத்தினர்.
அப்போது சென்னை கலெக்டர் அலுவலகத்தில், டாஸ்மாக் அதிகாரிகள், இ.கம்யூ., கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், அமைதி பேச்சு இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் கூறினர்.
அதை தொடர்ந்து, போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர். பாதுகாப்பிற்காக, 60க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.