Sport
செப்.9ல் முதல்வர் கோப்பை போட்டி
மதுரை: முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் செப். 9ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.
பள்ளி மாணவர்களுக்கான ஆடவர், மகளிர் பிரிவு இறகுபந்து, தடகளம், கூடைபந்து, கால்பந்து, நீச்சல், யோகா, கபடி, செஸ், கேரம், ஹாக்கி, ஹேண்ட்பால், சிலம்பம், டேபிள்டென்னிஸ், வாலிபால், ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டிகள் செப். 9 முதல் 12 வரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டி வீரபாஞ்சான் சோலைமலை பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. செப். 9ல் ஆடவர் கோகோ, 12ல் மகளிர் கோகோ அமெரிக்கன் கல்லுாரியில் நடக்கிறது.
கல்லுாரி ஆடவர், மகளிர் பிரிவு நீச்சல், தடகளம், இறகுபந்து, கூடைபந்து, ஹேண்ட்பால், வாலிபால், கேரம், செஸ், டேபிள் டென்னிஸ், சிலம்பம், கபடி, ஹாக்கி, கால்பந்து, ஸ்பீட் ஸ்கேட்டிங், பூப்பந்து, கிரிக்கெட், யோகா போட்டிகள் செப். 11 முதல் செப். 18 வரை பல்வேறு இடங்களில் நடக்கிறது. ஆடவர், மகளிர் பொதுப்பிரிவின் கீழ் தடகளம், வாலிபால், கேரம், சிலம்பம், யோகா, கிரிக்கெட், கபடி, இறகுபந்து, கால்பந்து போட்டிகள் செப். 19 முதல் 21 வரை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டி செப். 21 லும் குழுப்போட்டி செப். 22 லும் அரசு ஊழியர்களுக்கான தடகளம், செஸ், வாலிபால், யோகா, கேரம், கபடி, இறகுபந்து போட்டிகள் செப். 24 முதல் 26 வரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.