Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு துவக்கம்
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி செப்., 9 ல் துவங்கி செப்., 25 வரை நடைபெற உள்ளது. * பள்ளி மாணவர்களுக்கு: இன்று விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான தடகளம், இறகு, கூடை, கையுந்து பந்து, கபடி, வளைகோல் பந்து போட்டி நடக்கும். (செப்., 10) மாணவிகளுக்கு நடக்கும். காளையார்கோவில் ேஹாலிஸ்பிரிட் பள்ளியில் மாணவிகளுக்கு கோ- கோ , நாளை மாணவர்களுக்கு நடக்கும். காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிலம்பம், செஸ், யோகாசன போட்டிகள் செப்., 15 அன்று மாணவர்களுக்கும், செப்., 16 ல் மாணவிகளுக்கும் நடக்கும்.
சிவகங்கை விளையாட்டு திடலில் செப்., 15 அன்று மாணவர்களுக்கு கேரம், நீச்சல், செப்., 16 ல் மாணவிகளுக்கு நடத்தப்படும். சிவகங்கை திடலில் கால்பந்து போட்டி செப்., 15 ல் மாணவர்களுக்கும், செப்., 16 ல் மாணவிகளுக்கு நடத்தப்படும். காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் கிரிக்கெட் போட்டி செப்., 15 ல் மாணவிகளுக்கும், செப்., 16 ல் மாணவர்களுக்கு நடக்கும்.
இதே பள்ளியில் டேபிள் டென்னிஸ் போட்டி மாணவர்களுக்கு செப்.,15 அன்றும் மாணவிகளுக்கு செப்., 16 ல் நடக்கும். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு செப்., 10 ல் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடக்கும். * கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி: சிவகங்கை விளையாட்டு அரங்கில் தடகளம், இறகு, கூடை, வளைகோல், கையுந்து பந்து, பால் பேட்மிண்டன் ஆகிய போட்டிகள் செப்., 17 ல் மாணவர்களுக்கும், செப்., 18 மாணவிகளுக்கும் நடக்கும். காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் செப் 17 ல் மாணவர்களுக்கு சிலம்பம், செஸ், யோகாசனம், செப்.,18 ல் மாணவிகளுக்கு நடைபெறும். சிவகங்கை விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கு செப்., 21 மற்றும் மாணவிகளுக்கு செப்., 22 ல் கேரம், நீச்சல் போட்டி நடக்கும். இங்கு செப்., 21 ல் மாணவர்களுக்கும், செப்., 22 ல் மாணவிகளுக்கும் கால்பந்து போட்டி நடக்கும்.
செப்., 17 ல் மாணவர், செப்., 19 ல் மாணவிகளுக்கு காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடக்கும். காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் செப்., 21 ல் மாணவர், செப்., 22 ல் மாணவிகளுக்கு கபடி நடக்கும். காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் செப்., 17 ல் மாணவர்களுக்கும், செப்., 18 ல் மாணவிகளுக்கு டேபிள் டென்னிஸ் நடக்கும். செப்., 10 ல் இரு பாலருக்கும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பீடு ஸ்கேட்டிங் நடைபெறும். * பொது பிரிவினருக்கான போட்டி: சிவகங்கை விளையாட்டு அரங்கில் செப்., 23 ல் இருபாலருக்குள் தடகளம், இறகு பந்து, கபடி, கால்பந்து, கேரம், கையுந்து பந்து போட்டி நடக்கும். காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் ஆண்களுக்கு செப்., 17 ல், பெண்களுக்கு செப்., 18 ல் சிலம்பம், யோகாசன போட்டியும், செப்., 22 ல் இருபாலருக்கும் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடக்கும். * அரசு ஊழியர், மாற்றுத்திறனாளி போட்டி: செப்., 24 ல் சிவகங்கை விளையாட்டு அரங்கில் இருபாலருக்கும், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கபடி, கேரம், செஸ், யோகாசனம் போட்டி நடக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிவகங்கை விளையாட்டு அரங்கில் செப்., 25 ல் அனைத்து வகை போட்டிகளும் நடைபெறும். போட்டியில் பங்கேற்போர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகத்துடன் வரவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ///



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

