Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இடங்கள் விபரம் அறிவிப்பு
சேலம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட, மண்டல போட்டி நடக்கும் விபரங்களை, ஆணையம் வெளியிட்-டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு காந்தி மைதா-னத்தில் வரும், 9ல் தடகளம், சிலம்பம், கூடைப்பந்து, ஹேண்ட்பால்; மாநகராட்சி கிளப்பில் பேட்மின்டன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கேரம்; செயின்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சதுரங்கம், நீலாம்பாள் பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. அதேபோல் செயின்ட் பால் பள்ளியில் கால்பந்து, பள்ளி மாணவி-யருக்கு டேபிள் டென்னிஸ்; சவுடேஸ்வரி மெட்ரிக் பள்ளியில் கோ - -கோ போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் கல்லுாரி பிரிவில் காந்தி மைதானத்தில் மாணவியருக்கு நீச்சல் போட்டி, பள்ளி மாணவியருக்கு யோகா, வாலிபால் போட்டி நடக்க உள்-ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, வரும், 9 முதல், 22 வரை நடக்க உள்ளன. போட்டி நடக்கும் இடங்கள், ஒருங்கி-ணைப்பாளர் தொலைபேசி எண் குறித்த விபரங்கள், எஸ்.டி.ஏ.டி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது' என்-றனர்.