Arts, culture, entertainment and media
மது இறக்க கூலி கொடுக்க இயலாது டாஸ்மாக் சங்க கூட்டுக்குழு முடிவு
பனமரத்துப்பட்டி:சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
அறிவித்த ஊதிய உயர்வு, குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. அரசு
அறிவித்தபடி, சட்டத்துக்கு உட்பட்டு, எம்.ஆர்.பி., விலைக்கு
மதுபாட்டில் விற்கிறோம். டாஸ்மாக் கடைகளில் தினமும் ஏற்படும்
பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
பாட்டிலை தனியார் முகமை மூலம் திரும்ப பெற வேண்டும். கிடங்கில் இருந்து
கொண்டு வரப்படும் மது பெட்டிகளை கடையில் இறக்கி வைக்க, எங்களால் எந்த
கூலியும் கொடுக்க இயலாது. ஒப்பந்ததாரர்கள் மூலம் இறக்கி வைக்க
வேண்டும். டாஸ்மாக் கடைக்கு நிர்வாகம் வழங்கும் குறைந்த வாடகை
தொகையுடன், கடை ஊழியர்கள் கூடுதலாக சேர்த்து வழங்கி வரும் வாடகை
தொகையை இனி வழங்க இயலாது. கடையில் மது விற்பனையின் போது உடையும்
பாட்டில்களுக்கும், காலி அட்டை பெட்டி சேதார தொகையினை நிர்வாகமே
களை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விளக்க குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் கூறுகையில், 'சேலம் மண்டலத்தில் உள்ள, 7
மாவட்டங்களில், வரும், 8 முதல், காலி பாட்டிலை திரும்ப
வாங்குவதில்லை. காலி பாட்டில் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை,
மாவட்ட அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்'
என்றனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
