Politics
தவெகவிடம் ஆதரவு கோரும் கம்யூனிஸ்ட்?; எதிர்பார்த்து காத்திருக்கும் காங்கிரஸ்!

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி என்கிற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு திமுக சார்பில் சேது செல்வம் என்பவரும் ஆளுங்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
பொதுத்தேர்தலின்போது தவெகவுடன் கூட்டணியில் இருந்த நேயம் மக்கள் கட்சியின் சார்பில் விநாயகம் என்பவர் போட்டியிட்டு இருந்தார். அவரே இந்த முறையும் சீட் கேட்டு வருகிறார். காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் போட்டியிடுகிறார் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தவெகவின் தலைவரான முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் ஆதரவு கேட்பது என முடிவு செய்துள்ளது பாண்டிச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தமிழ்நாட்டில் நேற்று புதியதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணியின் தலைவராக தமிழக வெற்றி கழகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதிமுக, விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சி இணைந்துள்ளது. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும் என சி.பி.ஐ கட்சி சார்பில் இன்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடதுசாரிகள் தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து நாங்கள் ஆதரவு தெரிவிப்பது போல் இந்த பாண்டிச்சேரி இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அடிப்படையிலேயே கேட்கப்படுகிறது என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் இடதுசாரிகளின் முடிவு என்ன என்பது இதுவரை தெரிய வரவில்லை. புதுவை தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் சின்னத்தில் நேயம் மக்கள் கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இப்பொழுது காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும் என தெரியவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)