Politics
விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து 3வது நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
கோபி:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சவுண்டப்பூரில் மூன்றாவது நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவங்கியது.
கோபி அருகே சவுண்டப்பூர் கிராமத்தில், தடப்பள்ளி வாய்க்கால் மூலம், 260 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த, நெல் அறுவடை பணிகள் நடக்கிறது. இந்நிலையில், கடந்த, ஆக.,24 முதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், அத்தாணி சாலையில் ஒரே இடத்தில், சவுண்டப்பூர் பகுதிக்காக இரு கொள்முதல் நிலையங்கள் துவங்கின. கடந்த, 5ம் தேதி முதல் நெல் கொள்முதல் பணி துவங்கியது. இரு கொள்முதல் நிலையங்
களிலும், நாளொன்றுக்கு தலா 1,000 மூட்டை, டோக்கன் அடிப்படையில் கொள்முதல் நடக்கிறது. நேற்று வரை, 203 டோக்கன் பெற்றிருந்த நிலையில், 70 பேரின் நெல் கொள்முதல்
செய்யப்பட்டிருந்தது.
ஒரு கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு, ஐந்து டோக்கனுக்கு உண்டான மூட்டைகள் மட்டுமே, கொள்முதல் செய்ய முடிந்ததால், அங்கு கூடுதலாக மற்றொரு கொள்முதல் நிலையம் துவங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஏற்கனவே இரு கொள்முதல் நிலையம் நடை
முறையில் உள்ள சூழலில், நேற்று ஒரு கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.
இதற்காக, எலக்ட்ரானிக் தராசு, பில்லிங் மெஷின், பட்டியல் எழுத்தர் ஒருவர் தலைமையில், நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவங்கியது. இதனால் சவுண்டப்பூர் பகுதி விவசாயிகள் நேற்று மகிழ்ச்சியடைந்தனர்ர். மழை காலமாக இருப்பதால், விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.