Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம் 1.25 லட்சம் பேர் முன்பதிவு
நாமக்கல்:இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின், தமிழக விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நேற்று
தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில், 2026-27ம் ஆண்டிற்கான,
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி,
பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என,
ஐந்து பிரிவுகளில், இருபாலரும் பங்கேற்கும் வகையில் நேற்று
தொடங்கியது. இப்போட்டிகள் அனைத்தும், காலை, 7:00 முதல், மாவட்ட
விளையாட்டு அரங்கம், கே.எஸ்.ஆர்., கல்லுாரி, கிளாசிக் பள்ளி,
விக்டோரியா ஹால் மற்றும் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளி ஆகிய இடங்களில்
நடக்கிறது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 17 வகையான
போட்டிகளும், பொதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கு மற்றும் அரசு
ஊழியர்கள் ஆண்கள், பெண்களுக்கு என, தலா, ஒன்பது வகையான போட்டிகள்
நடக்கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
அவர்களுக்கு, நான்கு வகையான பிரிவு விளையாட்டுகள், வரும், 21ல்
நடக்கிறது. நேற்று தொடங்கிய விளையாட்டு போட்டிகளை, நாமக்கல்
கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
அதற்காக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுப்பிரிவினர்,
மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என, மொத்தம், ஒரு லட்சத்து,
25,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மாவட்டம் மற்றும் மண்டல
அளவில், தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல்
பரிசு, 3,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 2,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 1,000
ரூபாய் வழங்கப்படும்.
மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.