Religion
விவேகானந்தர் பேரவை சார்பில் 30 இடங்களில் விநாயகர் சிலை
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் விவேகானந்தர் ஹிந்து பேரவை சார்பில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இது குறித்து விவேகானந்தர் ஹிந்து பேரவை மாவட்ட தலைவர் முத்துசாமி கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவை, இந்த ஆண்டு மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடுகிறோம். சிறுமுகை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 13ம் தேதி காலை அனைத்து இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்து, கணபதி ஹோமம் செய்து, விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மாலையில் திருவிளக்கு பூஜை, 15ம் தேதி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலை, 5:00 மணிக்கு விசர்ஜன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. சிறுமுகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.