Religion
வண்ணம் பூசும் பணி தீவிரம்... விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் ஆயிரக்கணக்கான சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
