Sport
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி
கோவை: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது.
கோவையில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டிகள் நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் துவங்கின.
‘நாக் அவுட்’ முறையிலான போட்டியில் மாணவர்கள் பிரிவில் 61, மாணவியர் பிரிவில் 28 அணிகளும் பங்கேற்றுள்ளன.
மாணவர்களுக்கான முதல் போட்டியில் சுகுணா இன்டர்நேஷனல் பள்ளி, 28–9 என்ற புள்ளிகளில் கே.கே.நாயுடு பள்ளி அணியையும், மாணவியருக்கான போட்டியில் சுகுணா பிப் பள்ளி அணி 23–7 என்ற புள்ளிகளில் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி அணியையும் வென்றது.