Religion
95 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
சூலூர்: சூலூர் மற்றும் சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில், 95 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது, என, இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நாடு முழுவதும் வரும், செப்., 14 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி, சூலூர் நகரம் மற்றும் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் காங்கயம் பாளையத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ‘விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, சூலூர், சோமனூர் வட்டாரத்தில், 95 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து மூன்று நாட்கள் வழிபட வேண்டும், என்றார்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் பேசியதாவது: முதல் நாள் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் ஜியின், நூற்றாண்டு விழா வேண்டும். ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க, பாதுகாக்க அவர் ஆற்றிய பணிகள், தியாகங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்.
இரண்டாம் நாளில் தாய்மார்கள் தினத்தையும், மூன்றாம் நாளில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட செயலாளர் மதன்குமார், நகர பொறுப்பாளர்கள் பூபதி, ஜெகதீஷ், சரத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்